உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரையோரம் வசித்த 100 பேர் மீட்பு

கரையோரம் வசித்த 100 பேர் மீட்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையோரம் வசித்த 24 குடும்பங்கள் மீட்கப்பட்டு, அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக மணிமுக்தாற்றில 12 ஆயிரம் கன அடி வெள்ளம் கரைபுரண்டோடியது. அதில், விருத்தாசலம் மணிமுக்தாற்றின் கரையோரம் தீர்த்த மண்டப தெருவை சேர்ந்த 24 வீடுகளில் சுவர்களில் விரிசல் விழுந்து, இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.தகவலறிந்த நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், தாசில்தார் உதயகுமார், கவுன்சிலர் சிங்காரவேல் ஆகியோர் அவர்களை சந்தித்து, வீடுகளை விட்டு வெளியேற்றி, அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 4 வகுப்பறைகளில் தங்க வைத்தனர்.தொடர்ந்து, அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்ட உதவிகளை வழங்கினர். உதவி பொறியாளர் சசிகுமார், கவுன்சிலர்கள் தீபா மாரிமுத்து, ராஜாத்தி சரவணன், வசந்தி புருேஷாத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மேலும், அ.தி.மு.க., நகர செயலாளரும், கவுன்சிலருமான சந்திரகுமார் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ