உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 13 புதிய பஸ் சேவைகள்; வேளாண் அமைச்சர் துவக்கி வைப்பு

கடலுாரில் 13 புதிய பஸ் சேவைகள்; வேளாண் அமைச்சர் துவக்கி வைப்பு

கடலுார்; கடலுாரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 13 புதிய பஸ் சேவைகளை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.கடலுார் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிட். சார்பில், பொதுமக்களின் சாலை போக்குவரத்து வசதிக்காக 13 புதிய பஸ் சேவைகளை கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், எம்.எல்.ஏ., ஐயப்பன் முன்னிலையில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.கடலுார்-பண்ருட்டி (வழி) நெல்லிக்குப்பம், கடலுார்-ஆயிப்பேட்டை (வழி) குள்ளஞ்சாவடி, சத்திரம், கடலுார் - சித்திரைப்பேட்டை (வழி) ஆலப்பாக்கம், திருச்சோபுரம் உட்பட 13 புதிய அரசு பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கடலுார் மண்டல பொது மேலாளர் ராகவன் மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பல்லவி
ஏப் 15, 2025 06:47

புதிய பேருந்துகளில் டயர் மற்றும் சர்வீஸ் செய்து அனுப்புங்க பாதையில் டயர் கழண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது


சமீபத்திய செய்தி