மேலும் செய்திகள்
மக்காச்சோளம் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
03-Dec-2024
வேப்பூர்: கனமழையால், வேப்பூர் தாலுகாவில் 16 வீடுகள் சேதமடைந்தன.வேப்பூர் தாலுகாவில் 53 வருவாய் கிராமங்கள் உள்ளன. புயல் காரணமாக, கடந்த 3 நாட்களாக வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை பெய்தது. இதனால், விவசாய வயல்கள், குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நின்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கனமழையால், வேப்பூர் தாலுகாவை சேர்ந்த ஒரங்கூரில், 4, சேப்பாக்கம், 3, வேப்பூர், 2, ஆதியூர், பூலாம்பாடி, நிராமணி, என்.நாரையூர், பா.கொத்தனூர், காட்டுமயிலூர், ஏ.சித்தூர் கிராமங்களில் தலா 1 வீடு சேதமடைந்தன. இது குறித்து வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் உத்தரவின்படி, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
03-Dec-2024