உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டில் 19 சவரன் நகை திருட்டு ராமநத்தம் அருகே துணிகரம்

வீட்டில் 19 சவரன் நகை திருட்டு ராமநத்தம் அருகே துணிகரம்

ராமநத்தம்: ராமநத்தம் அருகே வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 19 சவரன் நகைகளை மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த தொழுதுார் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார்,65; இவர், கடந்த 1ம் தேதி பெரம்பலுாரில் உள்ள அவரது மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.நேற்று மாலை 5:00 மணிக்கு தொழுதுார் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த செயின், வளையல் உள்ளிட்ட 19 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு 12 லட்சம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகராம்பூண்டியில் ஐந்தரை சவரன் நகைகள் திருடுபோன நிலையில், மீண்டும் ஒரு திருட்டு நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !