உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.4.20 லட்சம் மோசடி 2 பேர் அதிரடி கைது

ரூ.4.20 லட்சம் மோசடி 2 பேர் அதிரடி கைது

புதுச்சத்திரம் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.4.20 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையை சேர்ந்தவர் சர்க்கரையாஸ் மகன் வில்லியம்ஸ், 37; இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல், 33; என்பவர் மூலமாக குறிஞ்சிப்பாடி அடுத்த மேல்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த ஜகஜானந்தம்,37; என்பவரின் அறிமுகம் கிடைத்தது.இதையடுத்து இருவரும் வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக வில்லியம்சிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு ஆக., முதல் செப்., வரை, நான்கு தவணைகளாக, நேரிடையாகவும், 'ஜி-பே' மூலமாகவும் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றனர். ஆனால், வில்லியம்சை வெளிநாட்டிற்கு வேலை அனுப்பாமல் காலம் தாழ்த்தினர். சந்தேகமடைந்த அவர், இருவரிடமும் சென்று பணத்தை திருப்பிக் கேட்ட போது, பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீ சார் வழக்குப் பதிந்து ஜகஜானந்தம், மணிவேலை நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை