மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
04-Oct-2025
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே ஆடுகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் நிரோஷா,35; இவர் வீட்டின் வெளியில் கட்டப்பட்டிருந்த இரண்டு வெள்ளாடுகளை நள்ளிரவில் மர்மநபர்கள் இருவர் பிடித்து பைக்கில் ஏற்றியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியில் வந்த நிரோஷா மற்றும் உறவினர்கள்,ஆடுகளை திருடிய இருவரையும் பிடித்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆடுகளை திருடியவர்கள் திருக்கண்டேஸ்வரம் மேட்டுதெருவை சேர்ந்த சொக்கநாதன்,23;சித்தரசூர் புதுத்தெருவை சேர்ந்த மைக்கேல் அகஸ்டின்,18;என தெரியவந்தது.நடுவீரப்பட்டு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
04-Oct-2025