பெண்ணைத் தாக்கிய 2 பேர் கைது
கடலுார் : பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது வீட்டின் அருகில் அதே பகுதியைச் சேர்ந்த வசந்தராஜ், கவுதமன், விஷ்வா ஆகியோர் பட்டாசு வெடித்தனர். இதனை ஆனந்தராஜ் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. தடுக்க வந்த ஆனந்தராஜ் மனைவி சிவமதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விஷ்வா, கவுதமனை கைது செய்து, வசந்தராஜை தேடி வருகின்றனர்.