மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் பலி
15-Sep-2024
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை எண்.2650ல், கடந்த 29ம் தேதி இரவு மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து, ரூ.3,640 மதிப்புள்ள 26 மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன், 44, ஸ்ரீமுஷ்ணம் சன்னதி தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ், 45, ஆகியோர் டாஸ்மாக் கடையை உடைத்து, சரக்கு பாட்டில்களை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.இருவரையும் கைது செய்த விருத்தாசலம் போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15-Sep-2024