உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூங்கில்துறைப்பட்டில் வெள்ளம் 30 வீடுகள் அடித்து செல்லப்பட்டன

மூங்கில்துறைப்பட்டில் வெள்ளம் 30 வீடுகள் அடித்து செல்லப்பட்டன

மூங்கில்துறைப்பட்டு: தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், மூங்கில்துறைப்பட்டில் 30 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று அதிகாலை 2:00 மணி அளவில் வினாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது.இதனால், பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகரில் உள்ள 75க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்து, 30 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.கடந்த 52 ஆண்டுகளில் இதுபோன்ற வெள்ளப் பெருக்கை பார்த்ததில்லை என அப்பகுதி முதியவர்கள் தெரிவித்தனர்.எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நள்ளிரவில் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.தகவலறிந்த வருவாய் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு, பாதுகாப்பாக தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை