உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 3வது நாள் புத்தக கண்காட்சி

கடலுாரில் 3வது நாள் புத்தக கண்காட்சி

கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில் 3வது நாள் புத்தக திருவிழா கண்காட்சி நேற்று நடந்தது.கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் இளஞ்செல்வி வரவேற்றார். உள்ளூர் சொற்பொழிவாளர்கள் வளவதுரையன் வாசிப்பை சுவாசிப்போம் என்ற தலைப்பிலும், சண்முகசுந்தரம் இளமை எனும் பூங்காற்று என்ற தலைப்பிலும் பேசினர்.பேராசிரியர் பர்வீன் சுல்தானா மனிதனும் தெய்வமாகலாம் என்ற தலைப்பில் பேசினார். இன்றைய மாணவர்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் பெற்றோர்களா அல்லது ஆசிரியர்களா என்ற தலைப்பில் தணிகைவேலன் குழுவினரின் பட்டிமன்றம் நடந்தது.பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை