சூதாடிய 4 பேர் கைது
பெண்ணாடம்:பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெண்கரும்பூர், பெரியாண்டவர் கோவில் தோப்பில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த தேசாய்காந்தி, 50, பழனிசாமி, 47, திணேஷ்குமார், 26, அஜய்கிருஷ்ணன், 27, ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.