உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தட்டிகேட்டவர் மீது தாக்கு சிதம்பரத்தில் 4 பேர் கைது

தட்டிகேட்டவர் மீது தாக்கு சிதம்பரத்தில் 4 பேர் கைது

சிதம்பரம்: சிதம்பரத்தில், வீட்டின் அருகே மது குடித்தவர்களை கண்டித்த வீட்டு உரிமையாரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அருகே உள்ள வடக்கு சாலியந்தோப்பு உடையார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ராஜா, நேற்று இவரது வீட்டின் அருகே கடவாச்சேரி தாமரைக் குளம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் கணேஷ், 25; அதே ஊரை சேர்ந்த பெரியதெரு நடராஜன் மகன் மதிவாணன், 23; திரவுபதியம்மன் கோவில் தெரு வடிவேல் மகன் விஜய், 27; பெரிய தெரு நடராஜன் மகன் மாரியப்பன், 28; ஆகியோர் மது அருந்தினர். இதனை வீட்டு உரிமையாளர் ராஜா கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் ராஜாவை திட்டி, கத்தி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்த ராஜா, சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ராஜா, அண்ணாமலை நகர் போலீசில் கொடுத்த புகாரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்கு பதிவு செய்து, கணேஷ், மதிவாணன், விஜய், மாரியப்பன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை