மேலும் செய்திகள்
ரேஷன் கடை பணியாளர்கள் கைது
08-Nov-2024
கடலுார்: கடலுாரில் 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர்40 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கராசு, வட்ட தலைவர் கந்தன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும். தரமான பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.பின், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
08-Nov-2024