உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயின் பறிப்பு

பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயின் பறிப்பு

வேப்பூர் : வேப்பூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் தாலிச் செயினை மர்மநபர்கள் பறித்துச்சென்றனர்.வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் மனைவி மாரியம்மாள், 34. இவர், நேற்று முன்தினம் இரவு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மாரியம்மாள் கணவர் சிவராஜ், இயற்கை உபாதைக்காக வீட்டின் கதவை திறந்து விட்டு, பூட்டாமல் வெளியே சென்றார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த மாரியம்மாள் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் செயினை பறித்தார். அப்போது கண் விழித்த மாரியம்மாள் மர்ம நபரை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதை தொடர்ந்து, தாலிச் செயினுடன் தப்பி ஓடினார்.இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ