உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறைகேட்பு கூட்டத்தில் 589 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டத்தில் 589 மனுக்கள் குவிந்தன

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், 589 மனுக்கள் பெறப்பட்டன. கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, மா வட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, முத்திரைத் தாள் சப் கலெக்டர் தனலட்சுமி, கலால் உதவி ஆணையர் சந்திரகுமார் உள்ளிட் ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 589 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ