காலை உணவு சாப்பிட்ட 74 மாணவர்கள் அட்மிட்
நெய்வேலி:சர்வதேச யோகா தினத்தையொட்டி, கடலுார் மாவட்டம், நெய்வேலியில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், வட்டம் -10ல் உள்ள பாரதி விளையாட்டரங்கில் பயிற்சி செய்து வந்தனர். நேற்று பயிற்சி முடிந்ததும் மாணவ - மாணவியருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அப்போது, உணவு சாப்பிட்ட, 74 மாணவ - மாணவியருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்த ஆசிரியர்கள், அவர்களை மீட்டு என்.எல்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர்.உணவு மாதிரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சர் கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாணவர்களிடம் நலம் விசாரித்து, சிகிச்சை விபரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.