உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் 76வது குடியரசு தின விழா கோலாகலம்! ரூ.1.6 கோடியில் நலத்திட்ட உதவி

கடலுாரில் 76வது குடியரசு தின விழா கோலாகலம்! ரூ.1.6 கோடியில் நலத்திட்ட உதவி

கடலுார்; கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியினை ஏற்றிவைத்து 1கோடி6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கடலுார் அண்ணா விளயைாட்டரங்கில் 76வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காலை 8 மணிக்கு கொடிமேடைக்கு வருகை தந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 8.05 மணிக்கு எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலையில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மூவர்ண பலுான்களை வானில் பறக்க விட்டார். பின் திறந்த ஜீப்பில் சென்று காவதுறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 83 பேர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார்.பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து 100 பயனாளிகளுக்கு 1,06,57,660 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு 10,31,140 ரூபாய் மதிப்பிலான உதவிகளையும் அவர் வழங்கினார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு 48,00,000 ரூபாய் மதிப்பிலான உதவிகளை யும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு 12,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு 27,940 ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 25,000 ரூபாய் மதிப்பிலான உதவியையும், ஊரக வாழ்தார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 7 பயனாளிகளுக்கு 3,50,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு 10,80,250 ரூபாய் மதிப்பிலான உதவிகளையும், மத்திய கூட்டுறவு வங்கி லிட் சார்பில் 25 பயனாளிகளுக்கு 25 லட்சம் மதிப்பிலான உதவிகளையும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 3,08,502 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு 1,97,828 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதேபோன்று தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு 2,75,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என ஆகமொத்தம் 100 பயனாளிகளுக்கு 1,06,57,660 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.இவ்விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, பேரூராட்சிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பள்ளி கல்வித் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக பணி புரிந்த 201 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 83 சிறந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மேயர் சுந்தரி ரஜா, மாநகராட்சி ஆணையாளர் அனு, வளர்ச்சி திட்ட இயக்குநர் சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ