மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பாராட்டு விழா
12-Sep-2025
கடலுார்:கடலுார், துாக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு, 2019ல் நடந்த ஊராட்சி தலைவர் தேர்தலில் ராமச்சந்திரன், ரவி போட்டியிட்டனர். அதில், ரவி தோல்விஅடைந்தார். ராமச்சந்திரன் மற்றும் ரவி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. கடந்த 2020 ஏப்., 14ல் ராமச்சந்திரன் ஆதரவாளரான ஜனார்த்தனன், அவரது தம்பி கமலக்கண்ணன் ஆகியோர், அதே பகுதியில் பேசி கொண்டிருந்த போது, ரவி ஆதரவாளரான உலகநாதன் தரப்பினர் வந்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, தாக்கிக்கொண்டனர். இதில், ஜனார்த்தனன், கமலக்கண்ணன் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்ட கமலக்கண்ணன் உயிரிழந்தார். துாக்கணாம்பாக்கம் போலீசார், பள்ளிப்பட்டு ஊராட்சியை சேர்ந்த குமார், 48, வெங்கடேசன், 32, உட்பட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, வழக்கில் தொடர்புடைய சிவராமன் என்பவர் துாக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார் . குமார், வெங்கடேசன் உட்பட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி நேற்று தீர்ப்பளித்தார்.
12-Sep-2025