செல்லியம்மன் கோவிலில் 9 கலசங்கள் திருட்டு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் கலசங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லிக்குப்பத்தில் பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 4 நாட்களாக ஆஷாட நவராத்திரி பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் 11 கலசங்களில் புனித நீர் நிரப்பி தயார் செய்து விட்டு இரவு 12:00 மணிக்கு மேல் கோவில் பூசாரிகள் வீட்டுக்கு சென்றனர்.நேற்று காலை பூசாரி ராமு கோவிலுக்கு வந்த போது 9 கலசங்கள், குத்து விளக்குகள், மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் உகலநாதன் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தியதில், கோவில் வெளிகதவின் மேல்புறம் இருந்த சந்து வழியாக மர்ம நபர்கள் உள்ளே வந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.