மேம்பாலத்தில் முறிந்து தொங்கும் மின்கம்பம்
பெண்ணாடம்:ரயில்வே மேம்பாலத்தில், ஆபத்தான நிலையில் மின் விளக்கு கம்பம் முறிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். விருத்தாசலம் - திட்டக்குடி சாலை மார்க்கத்தில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக, ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேம்பாலம் வழியாக செல்லும் கரும்பு டிராக்டர்களில் அதிகளவு கரும்புகளை ஏற்றிச் செல்லும்போது, மின் விளக்கு கம்பங்கள் மீது உரசி சென்றன. அவ்வாறு சென்றபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன், மின் விளக்கு கம்பம் ஒன்று முறிந்து ஆபத்தான நிலையில் தொங்கி உள்ளது. அவற்றை இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாலத்தை கடந்து செல்ல அச்சமடைகின்றனர். பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் விளக்கு கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.