மேலும் செய்திகள்
வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு
20-Mar-2025
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
12-Apr-2025
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மேல்குமாரமங்கலம் தென்பெண்ணையாற்றில் மீன்பிடிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் ராமமூர்த்தி,40; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தென்பெண்ணையாற்றின் கரையோரம் தேங்கியிருந்த நீரில் மீன்பிடிக்க சென்றார். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் மேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராமமூர்த்தி உடலை தேடினர். பின் நேற்று காலை இறந்த நிலையில் ராமமூர்த்தியின் உடலை மீட்டனர். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Mar-2025
12-Apr-2025