காட்சி பொருளாக மாறிய குடிநீர் தேக்க தொட்டி
நெல்லிக்குப்பம்: குடிநீர் தேக்க தொட்டி காட்சிப்பொருளாக மாறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி, 12 வது வார்டு திருக்கண்டேஸ்வரத்தில் கடந்த, 1996 ஆம் ஆண்டு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இது கடந்த, 8 ஆண்டுகளாக, பயன்பாட்டில் இல்லை. அங்கிருந்த ஆழ்துளை கிணறு மின் மோட்டாரும் பழுதாகி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக, பயன்பாட்டில் இல்லாத நீர் தேக் க தொட்டிக்கு, செலவு செய்து பெயிண்ட் அடித்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்கினர். ஆனால் தொட்டியின் உள்ளே, சிமண்ட் காரை பெயர்ந்து கம்பிகள் தெரிவதை சரி செய்யவில்லை. இதை இடித் து விட்டு, புதியதாக நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.