உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு திதி

ஆடி அமாவாசை வழிபாடு; முன்னோர்களுக்கு திதி

கடலுார்; கடலுார் சில்வர் பீச்சில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். ஆடி அமாவாசையையொட்டி மறைந்த முன்னோர்களுக்கு கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து, கடலில் குளித்து, புரோகிதர்கள் தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். அதேப் போன்று கடலுார் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறுகளிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி, விருத்தகிரீஸ்வரர் சுவாமியை வழிபடுவதால், 'காசியை விட வீசம் பெருசு விருத்தகாசி' என்ற ஆன்மிக ஐதீகம் உள்ளது. இதனால், அமாவாசை நாட்களில் மணிமுக்தாற்றில் முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி, ஆடி அமாவாசையான நேற்று அதிகாலை முதலே பச்சரிசி, வெல்லம், எள், காய்கறிகள், அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களை நெய்வேதியமாக படையலிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர், விருத்தகிரீஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர். இதே போன்று, ஏகநாயகர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, அங்குள்ள பகவான் மகாவீர் பசுமடத்தில் உள்ள பசுக்களுக்கு வெல்லம், அகத்திக்கீரையை வழங்கினர். சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்திலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை