உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அக்காடமி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடலுாரில் வரும் 10ம் தேதி துவக்கம்

அக்காடமி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடலுாரில் வரும் 10ம் தேதி துவக்கம்

கடலுார்: கடலுாரில் கிரிக்கெட் அக்காடமி கோப்பைக்கான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் வரும் 10ம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.கடலுார் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கு இடையேயான 2025-26ம் ஆண்டு கடலுார் மாவட்ட கிரிக்கெட் 'அக்காடமி கோப்பை' கிரிக்கெட் போட்டிகள் வரும் 10ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை எட்டு நாட்கள் கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கம் மைதானத்தில் நடக்கிறது. போட்டிகள் வரும் 10ம் தேதி காலை 8.30 மணிக்கு கிரிக்கெட் சங்க மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார். போட்டியில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் போன்ற 16 அணிகள் பங்கேற்கிறது. போட்டிகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. வெற்றிப் பெறும் அணிக்கு அக்கா டமி கோப்பையும், பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தங்கள் பொருப்பில் எடுத்து வரவேண்டும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க, பார்வையாளர்கள் மைதானத்தில் அனுமதிக்கபடுவர். கிரிக்கெட் போட்டி ஏற்பாடுகளை கடலுார் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூத்தரசன், வெங்கடேசன், நெடுஞ்செழியன், துரைராஜ், பாபு உள்ளிட்ட செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ