உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில் சாதனையாளர்களுக்கு பாராட்டு

தற்காப்பு கலை பயிற்சி பள்ளியில் சாதனையாளர்களுக்கு பாராட்டு

விருத்தாசலம்; விருத்தாசலம் தமிழன் தற்காப்புக்கலை பயிற்சி பள்ளி சார்பில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பயிற்சி பள்ளி தலைவர் மணிவாசகன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கவிதா, தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கணேஷ்குமார், ஏ.ஜி.பி., புரோமோட்டார்ஸ் நிறுவனர் அன்வர்பாஷா, அறிவழகன், வர்மக்கலை நிபுணர் அசோக்குமார், வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். தேக்வாண்டோ தேசிய நடுவர் செந்தில்முருகன் வரவேற்றார்.விழாவில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தற்காப்புக்கலை பயிற்சி பள்ளியில் சாதனை புரிந்த 150 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார். பொருளாளர் இனியகார்த்திக், விஷ்வா, ஆதித்யா, சாருமதி, ராஜ்குமார் உட்பட பெற்றோர், கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !