உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டோக்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஆட்டோக்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடலுார்; அனுமதி நிபந்தனைகள் மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கடலுார் மாநகர ேஷர் ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் கொடுத்துள்ள மனு;400க்கும் மேற்பட்ட அபே வாகன ஓட்டுநர்கள், தங்கள் ஆட்டோக்களை ஸ்டேஜ் கேரேஜாக ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி செல்கின்றனர். ஸ்டேஜ் கேரேஜ் போன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தனிநபர் கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். இந்த ஆட்டோக்களை ேஷர் ஆட்டோ, ஸ்டேஜ் கேரேஜாக இயக்க அனுமதிப்பதை தடுக்கவும், அனுமதி நிபந்தனைகள் மீறி இயங்கும் அபே ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கடலுாரில் அனுமதி நிபந்தனைகள் மீறி வாகனங்களை இயக்கும் அபே ஆட்டோ டிரைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ