மேலும் செய்திகள்
நரிக்குறவர்களுக்கு வீடுகள் எம்.எம்.ஏ., வழங்கல்
05-Jan-2025
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நபார்டு (2024-2025) திட்டத்தில், ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். பி.டி.ஒ., சங்கர், பொறியாளர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெகஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
05-Jan-2025