உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., கள ஆய்வுக்குழு கூட்டம் மாஜி., அமைச்சர்கள் பங்கேற்பு

அ.தி.மு.க., கள ஆய்வுக்குழு கூட்டம் மாஜி., அமைச்சர்கள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., கள ஆய்வுக்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம் பங்கேற்றனர். அ.தி.மு.க., கடலூர் கிழக்கு மாவட்ட கள ஆய்வுக்குழு கூட்டம் சிதம்பரம் சாரதாராம் ேஹாட்டலில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ, தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம் ஆகியோர் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, ஒற்றுமையுடன் செயல்பட அறிவுறுத்தினர்.கூட்டத்தில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பூமாலை சண்முகம், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட அவைத் தலைவர் குமார், பொருளாளர் தோப்பு சுந்தர், மாவட்ட பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர்கள் செல்வம், தேன்மொழி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், ஒன்றிய குழு சேர்மன் பூங்குழலி பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அசோகன், வாசுமுருகையன், நகர செயலாளர் செந்தில்குமார் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் குணசேகரன், தில்லை கோபி, டேங்க் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமைப்பு செயலாளர் முருகுமாறன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ