உயர் சாகுபடி பயிற்சி முகாம்
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த எழுந்திரவாணங்குப்பத்தில் விவசாயிகளுக்கு வேர்க்கடலையில் உயர் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. விருத்தாசலம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, உழவர் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வேளாண் பல் கலைக்கழக மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன் நிலக்கடலையில் உயர் சாகுபடி தொழில் நுட்பங்கள், விதை நேர்த்தி, நிலக்கடலை ஊட்டச்சத்து மற்றும் வள ர்ச்சி ஊக்கி பூஸ்டர் கலவை தெளிப்பதன் பயன்கள், களை மற்றும் உர நிர்வாகம் குறித்து பேசினார். நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சிகள் நோய்கள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கீதா பேசினார். ஏற்பாடுகளை நிலைய வேளாண் மேற்பார்வையாளர் பழனிசாமி செய்திருந்தார்.