தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
கடலுார்: தனியார் பஸ் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனசாக, ஒரு மாத சம்பளம் மற்றும் கருணைத்தொகை வழங்க பஸ் உரிமையாளர் தரப்பில் உடன்பாடு ஏற்பட்டது. தனியார் பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையொட்டி போனஸ், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடலுார் ,பண்ருட்டி தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆகியோர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பஸ் உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன், தலைவர் வேலவன், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சிவாஜி, துணைத் தலைவர் குபேந்திரன், இணை செயலாளர் ராஜேந்திரன், பஸ் தொழிலாளர்கள் தலைவர் குருராமலிங்கம், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகன், துணைத் தலைவர் கபாலி, தலைவர் காமராஜ் ஆகியோர் பேச்சுவார்த் தையில் பங்கேற்றனர். இதில் இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது. ஓட்டுனருக்கு ஒரு மாதம் சம்பளம் மற்றும் கருணைத்தொகை வழங்குவதெனவும், நடத்துனருக்கு போனஸ் ஒரு மாத சம்பளம் கருணைத்தொகை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. மேலும் சீருடை, இரவு தங்கும் படி 50 ரூபாய், வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது.