உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பில் வேளாண் கல்லுாரி மாணவிகள் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் சேத்தியாத்தோப்பில் தங்கி வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வண்டுராயன்பட்டு உயர்நிலை பள்ளியில் வேளாண் கல்லுாரி மாணவிகள் சார்பில் தண்ணீர் பாதுகாப்போம்; விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்திச் சென்றனர். கல்லுாரி மாணவிகள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, லீனா உள்ளிட்ட மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி