வேளாண் மாணவிகளின் அனுபவ பணிகள் முகாம்
சேத்தியாத்தோப்பு, :' சேத்தியாத்தோப்பு அடுத்த சாக்காங்குடி கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவிகளின் ஊரக பணி அனுபவ துவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். வேளாண்புல இறுதியாண்டு மாணவிகள் அஸ்விதா, அஸ்வினி, அட்சயா, ஆதிரா, பார்கவி, பாபின் முன்னிலை வகித்தனர். மாணவிகளின் குழுத்தலைவர் பெனிட்ரா ஐஸ்வரியா வரவேற்றார்.மாணவிகள் கிராமபுற அனுபவங்கள், மேற்கொள்ள வேண்டிய ஊரக பணிகள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினர். மாணவிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.