மேலும் செய்திகள்
வேளாண் மாணவிகளின் அனுபவ பணிகள் முகாம்
31-Dec-2024
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக இறுதியாண்டு மாணவிகள், சிதம்பரம் அடுத்து வல்லம்படுகையில் தங்கி, நேரடி வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனர்.துவக்க விழாவிற்கு, ஒன்றிய கவுன்சிலர் சேதுமாதவன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் கரிகாலன், தோட்டக்கலைத்துறை தலைவர் வசந்தன் முன்னிலை வகித்தனர். குழு மாணவி காவியா வரவேற்றார். விவசாயிகள் பாஸ்கர், அழகரசன், மதியழகன், தட்ணாமூர்த்தி உரையாற்றினர். மாணவி காவியா ஒருங்கிணைந்த பண்ணய முறையை பற்றி உரையாற்றினார். மாணவிகள் குழுத்தலைவி காவியா ஸ்ரீ, குழுத்துணை தலைவி கீர்த்தனா மற்றும் கசந்தாமணி, கவிபாரதி, காவியா, கீர்த்தனா, சீ. கீர்த்தனா பங்கேற்றனர்.மாணவி கேத்ரின் பாத்திமா நன்றி கூறினார்.
31-Dec-2024