உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் ஓட்டு சேகரிப்பு

 அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன் ஓட்டு சேகரிப்பு

வடலுார்: வடலுாரில், அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன், இறுதி கட்ட பிரசாரம் செய்தார் குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் புவனேந்திரன், வடலுாரில் நேற்று இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை ஆதரித்து நடிகர் மீசை ராஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு, வடலூர் பஸ் நிலையம் அருகே நேற்று ஓட்டு சேகரித்தார். வடலூர் நகர செயலாளர் பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வீரமணி, பா.ம.க., மாவட்ட செயலாளர்கள் முத்துக்கிருஷ்ணன், நகர செயலாளர் புஷ்பராஜ், பா.ஜ., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ