அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
மந்தாரக்குப்பம்; முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி மந்தாரக்குப்பத்தில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மருதை முனுசாமி, பச்சைமுத்து, கருப்பன் முன்னிலை வகித்தனர். கெங்கைகொண்டான் பேரூராட்சி செயலாளர் மனோகரன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சின்னரகுராமன், ராஜ்மோகன் துவக்கவுரையாற்றினர். அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், தலைமைகழக பேச்சாளர் காதல்சுகுமார், சுந்தரம், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் முருகமணி, விழுப்புரம் தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.,