மேலும் செய்திகள்
அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
05-Oct-2025
கடலுார்: கடலுார் தெற்கு மாவட்ட ஜெ.,பேரவை சார்பில் அ.தி.மு.க.,ஆட்சியின் சாதனை குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவந்திபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஜெ.,பேரவை செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வினோத் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், திருவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடைவீதிகளில் ஊர்வலமாக நடந்து சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பேசும் போது, 'தற்போதுள்ள தி.மு.க., ஆட்சி எப்பொழுது போகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பலமுறை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமையும ் ' என பேசினார். இதில், கடலுார் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், துணை செயலாளர் கோவிந்தராஜ், மாணவரணி செயலாளர் சஞ்சீவி, அண்ணா தொழிற்சங்கம் சுப்பிரமணியன், ஸ்ரீராம், மும்மூர்த்தி, அண்ணாமலை, குருநாதன், திருவந்திபுரம் கிளை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
05-Oct-2025