வடலுாரில் பழனிசாமி பிரசாரம் அ.தி.மு.க.,வினர் திரளாக பங்கேற்பு
கடலுார் : அ.தி.மு.க., கடலுார் தெற்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதி வடலுார் நான்கு முனை சந்திப்பில் நடந்த பிரசார கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் டாக்டர் கோபால், சிவா ராஜமாணிக்கம், ஜெ., பேரவை துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மாநில அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் முனைவர் பக்தரட்சகன், பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், வடக்குத்து கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், வினோத், வடலுார் நகர செயலாளர் பாபு, குறிஞ்சிப்பாடி பேரூர் செயலாளர் ஆனந்த பாஸ்கரன், அவைத் தலைவர் முத்துலிங்கம், பொருளாளர் தேவநாதன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், அன்பு, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் லோகநாதன், வழக்கறிஞர் தங்கரத்தினம், இலக்கிய அணி செயலாளர் உமாதேவன், மீனவர் அணி செயலாளர் புவனேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.