அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அ.தி.மு.க., மேற்கு மாவட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தங்கராசன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் முருகுமணி, மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருளழகன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். நகர செயலர் சந்திரகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். மாவட்ட துணை செயலர் வளர்மதி ராஜசேகர், முத்து, தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலர் அருண், ஜெ., பேரவை மாவட்ட செயலர் உமா மகேஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் முத்தமிழ்செல்வன், மீனவர் பிரிவு மாவட்ட செயலர் வெங்கடேசன், மாவட்ட மாணவரணி செயலர் ஹானஸ்ராஜ், ஒன்றிய செயலர்கள் முனுசாமி, பச்சமுத்து, வேல்முருகன், இளங்கோவன், நவநீதகிருஷ்ணன், நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், நகர அவை தலைவர் தங்கராஜ், வேங்கடவேணு, வர்த்த பிரவு துணை செயலர் சக்திவேல், மாவட்ட இணை செயலர் செஞ்சு லட்சுமி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலர் அருள், மாவட்ட மகளிரணி செயலர் ஜெயப்ரியா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலர் தம்பிதுரை நன்றி கூறினார்.