உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மிலாது நபியையொட்டி நோயாளிகளுக்கு உதவி

மிலாது நபியையொட்டி நோயாளிகளுக்கு உதவி

சிதம்பரம்: சிதம்பரத்தில் மீலாது நபியையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.சிதம்பரம் நகர செயலர் மஹபூப்ஹுசைன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார். சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு தலைமை மருத்துவர் லட்சுமி முன்னிலையில், ரொட்டி மற்றும் பழங்கள், பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.மேலும், சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள முதியோர் இல்லம், சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இல்லத்திற்கு ரொட்டி, பழங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில், சிதம்பரம் நகர தலைவர் தலைவர் அன்வர் அலி, பொருளாளர் ஷாஹுல் ஹமீது பாகவி, ரோட்டேரியன் பி.முஹம்மது யாசின் ஹாஜியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ