உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது கடத்தல் வாலிபர் கைது

மது கடத்தல் வாலிபர் கைது

கடலுார்: புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கடலுார் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை செக்போஸ்டில், நேற்று முன்தினம் இரவு போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் சென்ற நபரை பின்தொடர்ந்து சென்று பிடித்து விசாரித்ததில், விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் சாஸ்தா,33, எனத் தெரிந்தது. அவரிடமிருந்து 90மி.லி., அளவுள்ள நுாறு புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச்செல்வதுதெரிந்ததால் அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி