கராத்தே போட்டியில் அசத்தல்; மாணவர்களுக்கு பாராட்டு
பரங்கிப்பேட்டை; சென்னையில், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே அமைப்பின் சார்பில், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், கடலுார் மாவட்ட பெறாக் ஒகேனவா கோஜிரோ கராத்தே பயிற்சி பள்ளி சென்சாய் ரெங்கநாதன் தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில், சீனியர் 60 கிலோ எடை பிரிவில் மாணவி எழில் பாத்திமா முதல் இடத்தையும், 55 கிலோ எடை பிரிவில் சுபாஷிணி இரண்டாமிடம், 50 கிலோ எடை பிரிவில் நந்தினி மூன்றாம் இடம் பிடித்தனர்.சாதனை மாணவர்களை, தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க செயலாளர் அல்டாப் அலாம், கடலூர் மாவட்ட சென்சாய் ரெங்கநாதன் பாராட்டினர்.