உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவிலில் அம்மன் நகை திருட்டு

கோவிலில் அம்மன் நகை திருட்டு

வடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த ஆறு சவரன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவிலை மூடிவிட்டு சென்ற பூசாரி, நேற்று காலை திறக்க வந்தார். அப்போது கோவில் கேட் திறந்து கிடந்தது. அம்மன் கழுத்திலிருந்த ஆறு சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.தகவலறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை