மேலும் செய்திகள்
மது பாட்டில்கள் விற்றவர் கைது
03-Sep-2024
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று பாலக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சாத்துக்கூடல் மேல்பாதி, புதுக்காலனியைச் சேர்ந்த அன்பழகன், 69, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அன்பழகனை கைது செய்தனர். அவரிடம் இருந்த 24 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
03-Sep-2024