உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் அங்கன்வாடி மையம்

பயன்பாட்டிற்கு வராமல் பாழாகும் அங்கன்வாடி மையம்

பெண்ணாடம் பேரூராட்சி, சோழன்நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் துவங்கப்பட்டது. போதிய இடவசதி இல்லாததால் குழந்தைகள் அமர்ந்து படிக்கவும், சமைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது.தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் தெருவில் ரூ. 5.50 லட்சம் செலவில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி, முடிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை பயன்பாட்டிற்கு வராமல் செடி, கொடிகள் மண்டி, பாழாகி வருவதுடன், அரசு நிதியும் வீணாகிறது.எனவே, காமராஜர் தெருவில் பாழாகி வரும் புதிய அங்கன்வாடி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ