உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அங்கன்வாடி பணியாளர்கள்  விழிப்புணர்வு ஊர்வலம்

 அங்கன்வாடி பணியாளர்கள்  விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதி தேர்தல் பிரிவு சார்பில் அங்கன்வாடி பணியாளர்களின் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விருத்தாசலம் அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தாசில்தார் பிரகாஷ், தேர்தல் துணை தாசில்தார் குமாரகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜசேகர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பவானி வரவேற்றார். பதாகைகளை அங்கன்வாடி பணியாளர்கள் கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தல் பிரிவு உதவியாளர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ