உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்

கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்

கடலுார் : கடலுார் மற்றும் பண்ருட் டியில் தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நடந்தது. கடலுார் செம்மண்டலத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், மணி, லட்சுமணன்,பாஸ்கர், மதிவாணன், இளைஞரணி சதீஷ் பங்கேற்றனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், மஞ்சக்குப்பத்தில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட அவைத் தலைவர் குமார், மீனவர் அணி தங்கமணி, மருத்துவரணி சீனிவாசராஜா, ஜெ., பேரவை ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், வினோத், தகவல் தொழில் நுட்ப அணி பிரத்விராஜ், இலக்கிய அணி ஏழுமலை பங்கேற்றனர். அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் முருகன், சிவக்குமார், மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, துணைச் செயலாளர் வேல்முருகன் பங்கேற்றனர். பண்ருட்டி நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி, நான்குமுனை சந்திப்பில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம், ஆனந்தி சரவணன், நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம் பங்கேற்றனர். அ.தி.மு.க., நகர அ.தி.மு.க., செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ராஜதுரை, ஜெ., பேரவை நகர செயலாளர் செல்வம், எம்.ஜி.ஆர்., மன்றம் பாலு, இணை செயலாளர் சத்யா கலைமணி, துணை செயலாளர்கள் உமா மகேஸ்வரி ஸ்ரீதர், ரகு, மாவட்ட பிரதிநிதி சீனுவாசன், ஷர்புனிஷா சலாவூதீன், பாசறை செயலாளர் குமார் பங்கேற்றனர். நெய்வேலி மத்திய பஸ் ஸ்டாண்ட் அரு கில் அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து, உறுதிமொழி ஏற்றனர். தொகுதி பார்வையார் துரைசாமி, மாவட்ட பொருளாளர் தண்டபாணி, என்.எல்.சி.,தொ.மு.ச., பொதுச்செயலாளர் குருநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைவர் ரா மச்சந்திரன், தொ.மு.ச.,தலைவர் ஞானஒளி, பொருளாளர் அப்துல் மஜீத், அலுவலக செயலாளர் சீனிவாசன். குறிஞ்சிப்பாடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாநில அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, வழக்கறிஞர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், கோவிந்தராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர செய லாளர் பாபு பங்கேற்றனர். தி.மு.க., பேரூராட்சி தலைவர் ராமர், செயலாளர் சங்கர், துணை செயலாளர் விடுதலை சேகர் முன்னிலை வகித்தனர். 7வது வார்டில் 169 குடும்பங்களுக்கு மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சேகர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட அயலக அணி வீர குணசேகரன், கவுன்சிலர் செந்தில்நாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை