உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆண்டனி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

ஆண்டனி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் உள்ள ஆண்டனி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த (2024 - 25ம்) கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், பிளஸ் 2 கணித பாடப்பிரிவைச் சேர்ந்த உதயசந்திரிகா 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி தீப்திகா 91 சதவீதம் பிடித்து இரண்டாமிடம் பிடித்தனர்.அதேபோல், கணினி அறிவியில் பாடப்பிரிவைச் சேர்ந்த பெர்லின் ஆண்டனி 91 சதவீதம் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவன் கலையரசன் 98 சதவீதம் பெற்று முதலிடம், மாணவர் கிரிபிரசாத் 95 சதவீதம் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளனர். தமிழ் பாடத்தில் இரண்டு மாணவர்கள் சென்டம் மதிப்பெண்; கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் தலா ஒரு மாணவர்கள் சென்டம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களை பள்ளி தாளாளர் ஜார்ஜ் யுவராஜ், பள்ளி முதல்வர் லிடியா ஜார்ஜ் ஆகியோர் பாராட்டி, சால்வை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை