உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் 31ம் தேதிக்குள் கைரேகை பதிவு

அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் 31ம் தேதிக்குள் கைரேகை பதிவு

கடலுார் : அந்தோதயா ரேஷன் கார்டுதாரர்கள் வரும் 31ம் தேதிக்குள் அருகில் உள்ள ரேஷன் கடையில் தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுதாரர்கள் வரும் 31ம் தேதிக்குள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்திட வேண்டும்.பி.ெஹச்ஹெச் மற்றும் ஏஏஒய் வகை ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது கார்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை முழுமையாக பெற 31ம் தேதிக்குள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். பதிவு செய்யாதவர்கள் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் இருந்தாலும், அங்குள்ள ரேஷன் கடைகளில் தங்களது விரல் ரேகைகளை பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை