மேலும் செய்திகள்
'அண்ணா பதக்கம்' பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
26-Oct-2024
கடலுார்: முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள், 2 உடற்கல்வி ஆசிரி யர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது.இவ்விருது 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) ஒரு ஆட்ட நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கும் விருதும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.இவ்விருது பெறுவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
26-Oct-2024