அரசு குழந்தைகள் இல்லத்தில் கவுன்சிலிங் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலுார்: கடலுார் அரசு குழந்தைகள் இல்லத்தில் கவுன்சிலிங் கொடுக்கும் நபர் தேர்வு செய்ய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் சிபி ஆதித்யா தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கடலுார் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் (ஆற்றுப்படுத்துதல்) பணிக்கு மதிப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள இரண்டு இடங்கள் நிரப்பட உள்ளது. கவுன்சிலிங் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் உளவியல் மற்றும் கவுன்சிலிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.விண்ணப்பதார்கள் சுயமுகவரியிட்ட விண்ணப்பத்துடன் தங்களுடைய உரிய அனைத்து சான்றிதழ்கள் ஜெராக்ஸ் காப்பி இணைத்து அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவுன்சிலிங் நபர் வருகையின் அடிப்படையில் (ஒரு வருடத்தில் 70 நாட்களுக்கு மிகாமல் இரு தினங்களுக்கு ஒரு முறை வீதம்) ஒரு வருகைக்கு ரூ.1,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கண்காணிப்பாளர், அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் இல்லம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, செம்மண்டலம், கடலுார்- 607 001 என்ற முகவரிக்கு மே 5ம் தேதி மாலை 5:00 மணிக்குள் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04142-292766 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.